ஒன்றரை மாத சிசுவை கோடரியால் தாக்கி கொலை செய்த தாய்...!!


ஒரு மாதமும் 20 நாட்கள் வயதுடைய கைக்குழந்தை ஒன்றை அவரது தாயார் கோடரியால் தாக்கி கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று அனுராதபுரம் கிரவஸ்திபுர பகுதியில் இடம்பெற்றுள்ளது.

நேற்று(05) மதியம் இந்த பயங்கர சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த குழந்தையை கொலை செய்த சந்தேகநபரான தாய் கல்னேவ பொலிஸில் சரணடைந்துள்ளார்.

30 வயதுடைய பட்டதாரி ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.