கொக்கட்டிச்சோலையில் சேதனைப் பயிர் செய்கை தொடர்பான பயிற்சிப்பட்டறை!

மட்டக்களப்பு - பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொக்கட்டிச்சோலை கலாச்சார மண்டபத்தில் கொக்கட்டிச்சோலை கமநல சேவை நிலைய பிரிவினால் சேதனைப் பயிர் செய்கை தொடர்பான பயிற்சிப்பட்டறை நேற்றைய தினம் (02) மேற்கொள்ளப்பட்டது. 

குறித்த பயிற்சிப்பட்டறை கிழக்கு மாகாண ஆளுனரின் வழிகாட்டலில் இடம்பெற்றது. 

கிழக்கு மாகாண ஆளுனரின் அலுவலக உத்தியோகத்தர்கள் கிழக்கு மாகாண விவசாய திணைக்கள பிரதி விவசாயப் பணிப்பாளர், விவசாயப் போதனாசிரியர்கள்,கமநல அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்கள் பட்டிப்பளை பிரதேச செயலக உத்தியோகஸ்த்தர்கள் கலந்து கொண்டனர்.