பாடசாலைகளை 8 ஆம் திகதி ஆரம்பிக்க நடவடிக்கை...!!


சுகாதார அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளமையால் , எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் தேசிய பரீட்சைகளை எதிர்கொள்ளவுள்ள மாணவர்களுக்காக பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

கண்டியில் நேற்று சனிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த ஆண்டுகளை விட துரிதமாக ணு புள்ளிகளை இம்முறை வெளியிட்டுள்ளோம். அவற்றை அடிப்படையாகக் கொண்டு வெகுவிரைவில் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படுவர்.

தற்போதும் இணையவழியூடான கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதே போன்று அடுத்த வாரத்தின் இறுதி பகுதியில் சுகாதார அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளமையால் நாட்டிலுள்ள சகல பாடசாலைகளையும் தேசிய பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கும் எதிர்வரும் 8 ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.