மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரையில் உள்ள மக்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதுடன் இதுவரையில் தடுப்பூசிகளைப்பெற்றுக்கொள்ளாதவாகளுக்கும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மண்முனை தென் மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் இதுவரையில் முதலாவது தடுப்பூசியைப்பெற்றுக்கொண்ட 30வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டது.
மகிழடித்தீவு சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் இன்றைய தினம் இந்த தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இன்றைய தினம் கர்ப்பிணிப்பெண்களும்,விசேட தேவையுடையவர்களும் விசேடமாக தங்களுக்கான இரண்டாம் கட்ட தடுப்பூசிகளைப்பெற்றுக்கொண்டதுடன் இதுவரையில் தடுப்பூசிகளைப்பெற்றுக்கொள்ளாத 30வயதுக்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசிகளைப்பெற்றுக்கொண்டனர்.
மண்முனை தென் மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மகிழடித்தீவு,முனைக்காடு,முதலைக்குடா,பன்டாரியாவெளி,கற்சேனை,கொக்கட்டிச்சோலை,அரசடித்தீவு உட்பட பல பகுதிகளினை சேர்ந்தவர்கள் இன்றைய தினம் தங்களுக்குரிய இரண்டாம் கட்ட தடுப்பூசிகளைப்பெற்றுக்கொண்டனர்.