(புருசோத்)
ஆட்பதிவு திணைக்களத்தின் அனைத்து செயற்பாடுகளும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.
பத்தரமுல்லையிலுள்ள ஆட்பதிவு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து பிராந்திய கிளைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்படவுள்ளன.
திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்தே இந்த முடிவு எட்டப்பட்டதாக அத்திணைக்களத்தின் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.