கிழக்குப் பல்கலைக்கழகம் சாதனை


மருத்துவ பீடங்களுக்கிடையிலான முதலாவது “அகில இலங்கை நரம்பியல் வினாவிடைப் போட்டி”யில் கிழக்குப்மற்றும்   யாழ்ப்பாண   பல்கலைக்கழகங்கள் மூன்றாம் மற்றும் முதலாம் இடங்களை சுவீகரித்துச் சாதனை புரிந்துள்ளன.இம்மாதம் 20ஆம் திகதி இலங்கை நரம்பியல் சங்கத்தால் ஒழுங்குபடுத்தப்பட்டு பல இடர்ப்பாடுகளுக்கு மத்தியில் Zoom வழிப்போட்டியாக இந்நிகழ்வு நடைபெற்றது.

போட்டியின் ஆரம்பத்தில் இருந்தே கிழக்குப் பல்கலைக்கழகம் தொடர்ந்து தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொண்டு இருந்தது. பின்னணியிலிருந்த யாழ்ப்பாணஇ கொழும்பு பல்கலைக்கழகங்கள் போட்டியின்  இறுதிக் கட்டத்தில் மிகச்சிறப்பாக பதிலளித்து  முன்னிலை வகித்தமை பார்வையாளர்களை  உற்சாகத்தில் ஆழ்த்தியது

.போட்டியின் இறுதிச் சுற்றில் மூன்றாம் இடத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீடமும்இ கிழக்கு மற்றும் கொழும்பு பல்கலைக்கழகங்கள் சமமான புள்ளிகளை பெற்று முதலிடத்திலும் இருந்தன. வெற்றியாளரை தெரிவு செய்யும் “Tie-Breaker” சுற்றில் கொழும்பு மருத்துவ பீடத்தை 10க்கு 0 என்ற புள்ளி அடிப்படையில் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் தோற்கடித்து வரலாற்று சாதனை படைத்தனர். வெற்றிப் பரிசாக கிழக்கு பல்கலைக்கழகம் ஒரு  லட்சம் ரூபாய் பரிசுத் தொகையையும் யாழ் பல்கலைக்கழகம் ஐம்பதாயிரம் ரூபாய் பரிசுத்தொகையையும் வென்றன.

இப் போட்டிக்கு இரு பல்கலைக்கழக மாணவர்களையும் யாழ் பல்கலைக்கழக நரம்பியல் நிபுணர் வைத்தியகலாநிதி அஜினி அரசலிங்கம் அவர்கள் பயிற்றுவித்தார். 

அவருடன் இணைந்து மட்டக்கைப்பு போதனா வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் வைத்தியகலாநிதி ப.மயூரதன் அவர்களும் சிரேஷ்ட விரிவுரையாளர் வைத்தியகலாநிதி  ரோஷினி முருகப்பிள்ளை அவர்களும் மாணவர்களை தயார்ப்படுத்த அயராது பாடுபட்டனர். 

இரு பல்கலைக்கழகங்களினதும் வைத்திய நிபுணர்கள் கைகோர்த்து ஒன்றாக உழைத்தமை இந்த இடத்தில் பாராட்டத்தக்கது.