சம்பந்தனின் மரணத்திற்கு பின்னர் தலைவராவதற்கான பயணத்தினை நாங்கள் மேற்கொள்ளவில்லை-பிள்ளையான்


அரசியலுக்காக சம்பந்தனின் மரணத்திற்கு பின்னர் தலைவராவதற்கான பயணத்தினை நாங்கள் மேற்கொள்ளவில்லையென தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

இன்று மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சிறுமிகளை துஷ்பிரயோகம் என்பது ஊடகங்களில் வெளிவருவது அதுபோன்று சில விடயங்கள் சமூக மட்டத்தில் சென்று எல்லோருடைய மனச்சாட்சியை தட்டி எழுப்பி சமூகம் ஏற்படுத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களை இடம்பெறுவதை நாங்கள் அவதானித்துக் கொண்டிருக்கின்றோம் குறிப்பாக இப்பொழுது பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் அவர்கள் வீட்டில் நடைபெற்ற சம்பவம் அனைத்து மக்களது பேசு பொருளாக மாறியிருக்கின்றது என்னைப் பொறுத்தவரைக்கும் அது ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு முடிவாகவும் ஒரு சட்டத்தை இயக்குகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களுடைய வீட்டிலே இடம்பெற்றிருப்பது கவலைக்குரியது இது கண்டிக்கத்தக்கது.

இதை அந்த சிறுமிக்கு நடந்த சம்பவமாக மாத்திரம் பார்க்காமல் ஏன் இந்த சம்பவம் இடம்பெறுகின்றது எமது மக்களைக் இருக்கின்ற வறுமை காரணமாக அல்லது மலையக மக்களிடம் இருக்கின்ற அவர்களுடைய வாழ்வாதாரம் இடங்கள் காணிப்பிரச்சினை போன்ற காரணங்கள் தாக்கத்தின் விளைவாக பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டில் மாத்திரமல்ல கணிசமான வீடுகளிலேயே சிறுவர்கள் சிறுமிகள் வேலைக்கு அமர்த்தப் படுகிறார்கள் அது இந்த நாட்டில் இடம்பெறுவது பார்த்து இருக்கின்றோம்.

முழு நாடும் இணைந்து இவ்வாறான சம்பவம் நம்பர் அது உழைத்து இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் வறுமை நிலையில் இருக்கின்ற போது இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறாமல் நாங்கள் பாடுபட வேண்டும் அதை தான் என்னுடைய பார்வையிலேயே நான் முன்வைக்கின்ற செய்தியாக இருக்கின்றது நான் பாராளுமன்றத்திலும் இதைத்தான் வலியுறுத்தி இருக்கின்றேன்.

சம்பவங்கள் ஆங்காங்கே இடம்பெறலாம் நாடு உலகளவில் இடம்பெறுகின்றது அந்த அடிப்படையில் வறுமை காரணமாக ஒரு சிறுமி வேலைக்குச் சென்று இப்படியான ஏற்றுக் கொள்ளக் கூடாத சம்பவம் இடம்பெற்று விடக்கூடாது என்பதை நாங்கள் இணைந்து பணியாற்ற வேண்டும்.

ஒரு ஜனநாயக நாட்டிலே எதிர்க்கட்சி என்பது ஜனநாயகத்தை கொண்டு செல்வதற்கும் அல்லது எதிர் கட்சியினுடைய இலக்கு என்ன அடுத்த முறை ஆட்சி அமைப்பது அதற்கான வேலைத்திட்டங்களை எதிர்க்கட்சி செய்ய முடியும் ஆனால் அவர்களுக்கு நியாயமாக படுவது ஆளும்கட்சிக்கு நியாயம் இல்லாமல்படும் அந்த வகையில் நான் நினைக்கின்றேன் இப்போது இருக்கின்ற சூழ்நிலையில் தொழிற்சங்க ஆர்ப்பாட்டம் உண்மையிலேயே கவலைக்குரிய விடயமாக இருக்கின்றது.

அண்மைக்காலமாக ஆசிரியர் சங்கம் தங்கள் உரிமையை கேட்கின்றது தங்களுடைய உரிமையை கூறிக்கொண்டு கிராம மட்டத்தில் இருக்கின்ற மாணவர்களுக்கு கல்வி வழங்காமல் அதை தடை செய்து அச்சுறுத்துவது என்பது என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும் அது மாத்திரமல்ல ஆசிரியர் சங்கம் என்ற அடிப்படையிலேயே மட்டக்களப்பு மாவட்டத்திலேயே சிலர் யாரென்று தெரியாதவர்கள் அல்லது நான் ஒரு ஐந்து மாணவனை கற்பித்து வழி அனுப்பியிருக்கிறேன் உயர்ந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கின்றேன் என்று சொல்ல முடியாதவர்கள் இன்று சங்கத்தைப் பற்றியும் மக்கள் உரிமை பற்றி பேசுவது மிகவும் கவலைக்குரிய விடயமாக இருக்கின்றது அதை ஊடகங்களும் அதை எடுத்து பெரிதாக முன்னுரிமை படுத்துவதும் வேடிக்கையான விஷயமாக நான் பார்க்கின்றேன்.

சுமந்திரன் இந்த சார்பான அரசாங்கத்தால் நல்லாட்சி அரசாங்கத்தில் என்ன திட்டமிட்டு செய்து கொடுத்தார் அவர்களும் கமபரெலியவை நாங்கள்தான் செய்தோம் என்று விதியை போட்டு பெயர் பலகை அடித்தவர்கள் அவர்களுடைய அரசியல் கருத்துக்காக நாங்கள் பணி செய்ய தேவையில்லை.

எங்களுக்கு ஒரு பார்வை இருக்கின்றது கிழக்கு மாகாணத்தில் அரசியல் தலைவிதி எப்படி நிர்ணயிக்க வேண்டும் கிழக்கு மாகாணத்தில் மக்களை எவ்வாறு கட்டியெழுப்ப வேண்டும் கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற மக்களுக்கான கல்வி அமைய என்ன செய்ய வேண்டும் என்பதும் எங்கே குளம் கட்ட வேண்டும் எந்த அபிவிருத்தியை கூட்டினால் மக்கள் நன்மை அடைவார்கள் என்பது குறித்து எங்களுக்கு திட்டம் இருக்கின்றது.

திட்டம் இல்லாமல் அரசியலுக்காக அல்லது சம்பந்தருடைய மரணத்திற்குப் பிற்பாடு பின்னர் தலைவராவதற்கான பயணத்தை நாங்கள் மேற்கொள்ளவில்லை எங்களுடைய மக்களோடு உறுதியாக இருந்து பணி செய்து அவர்களுடைய தலைவர்கள் அவர்களுடைய கடந்தகால தலைவர்களை விட்ட பிழைகளை சரி செய்து இந்த மண்ணிலே வாழக்கூடிய நம்பிக்கையை கட்டியெழுப்ப கூடிய மக்கள் கூட்டத்தை நாங்கள் உருவாக்குவதற்கு பாடுபடுகிறோம்.