இராஜாங்க அமைச்சரின் வீட்டுக்கு முன்னால் ஏற்பட்ட கொலை தொடர்பான வழக்கு விசாரணை

கடந்த 21ஆந் திகதி இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்களது வீட்டிற்கு முன்பாக அவரது மெய்க்காவலர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட ந. பாலசுந்தரத்தின் வழக்கு இன்று மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி றிஸ்வான் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. 

குறித்த வழக்கில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி எம் கமலதாஸ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிகையில், இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலர் சுட்டுக்கொல்லப்பட்ட பாலசுந்தரத்தின் வழக்கில் இன்றைய தினம் கூப்பிடு தினமான இன்று பொலிஸ் தரப்பினரால் இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பப்பட வேண்டிய ஆவணங்களை சமர்பிற்ப்பதற்கு மன்றுக்கு கொண்டுவர பட்டிருந்தது. 

கொலை சம்பவம் 21ஆம் திகதி இடம் பெற்றிருந்த போதிலும் சீ சிடிவியினுடைய சில தரவுகள் கொண்டுவரப்படவில்லை இது தொடர்பாக நீதிமன்றம் கவனத்திற்கு கொண்டு வந்திருந்த போதிலும் 14மற்றும் 15 தினங்களுக்கு மேலாகவும் உரிய முறையில் நீதிமன்ற அனுமதியுடன் சிசிடிவி இணைப்புக்கள் அல்லது டிடிஆர் என்று சொல்லப்படுகின்ற இந்த இணைப்புகள் எதையும் பெற்றுக் கொள்ள பட்டிருக்கவில்லை பெற்றுக்கொள்ள பட்டிருப்பதை கூட நீதிமன்றத்துக்கு முறையாக சமர்ப்பிக்கப்படவில்லை. 

இதனால் எதிரிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பின்னடைவு ஏற்படுத்தும் என்ற ஒரு விடயத்தையும் குறித்த இந்த விசாரணையின் மட்டக்களப்பு பொலிஸார் மிகவும் மந்தமான நிலையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை கௌரவம் மன்றுக்கு பாதிக்கப்பட்டவர் சார்பில் ஆஜராகி இருந்த நாங்கள் தெரிவித்து இருந்தோம். 

அத்துடன் இரசாயன பகுப்பாய்வுக்கு வழங்க கொண்டு வரப்பட்டு இருந்த ஆவணங்களில் சில குறைபாடுகள் இருந்தது இரத்த மாதிரிகள் கூட கொண்டுவரப்படவில்லை. 

ஆகவே இவை அனைத்தையும் நீதிமன்றத்திற்கு கொண்டு வந்து சமர்ப்பிப்பதற்காக பிரிதொரு தினமாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை குறித்த வழக்கை மீண்டும் மன்று எடுத்துக் கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.