மாமாங்கம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் பரிசோதனையில் 11கொரனா தொற்றிளர்கள் அதிகூடிய செறிவு நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இது மிகவும் ஆபத்தான நிலையெனவும் சுகாதார துறையினர் தெரிவித்தனர்.
இந்த நிலையானது கூடுதலான தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தியிருக்கலாம் எனவும் பொதுச்சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
இதேநேரம் இன்றைய தினம் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் அதிகளவான தொற்றாளர்களாக 34பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
இதேநேரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 135பேர் கொரனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதுடன் ஒருவர் மரண அடைந்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நா.மயூரன் தெரிவித்தார்.
அதிகளவில் மட்டக்களப்பில் 34பேரும் காத்தான்குடியில் 20பேரும் ஓட்டமாவடியில் 25பேரும் கோறளைப்பற்று மத்தியில் 21பேரும் செங்கலடியில் 12பேரும் ஏறாவூரில் 11 என பல்வேறு பகுதிகளிலும் 135கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் காத்தான்குடியில் ஒருவர் மரணமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.