கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இரண்டாது நாளாகவும் நேற்று மந்த்ர கல்ப மஹா யாகம் சிறப்பாக நடைபெற்றது.
மக்கள் நோய் நொடியின்றி சகல சௌபாக்கியம் பெற்றுவாழவும் நாட்டில் ஏற்பட்டுள்ள துன்ப துயரங்கள் நீங்கவும் இந்த யாகம் நடாத்தப்படுகின்றது.
ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்களின் தலைமையில் இலங்கையின் பல பாகங்களிலும் இருந்துவருகைதந்த சிவாச்சாரியர்களின் மூலம் இந்த மந்திர ஹல்ப மகா யாகம் நடாத்தப்பட்டுவருகின்றது.
ஆலயத்தில் கணபதிக்கு நடாத்தப்படும் ஹோமத்தினை தொடர்ந்து ஆலய முன்றில் அமைக்கப்பட்டுள்ள யாக குண்டத்தில் மந்த்ர கல்ப மஹா யாகம் நடாத்தப்பட்டுவருகின்றது.
மனித குலத்தின் நன்மைக்காக அகத்திய மாமுனியினால் இந்த யாகம் நடாத்தப்பட்ட இந்த யாகமானது பல்வேறு அற்புத சக்திகளை வழங்ககூடியாது.
சிவனின் அருட்கடாசத்தினை வேண்டிய நடாத்தப்படும் இந்த யாகமான அதிகாலை 04மணிக்கும் மாலை 04மணிக்கும் நடாத்தப்பட்டுவருகின்றது.
நேற்று மாலை சிவாச்சாரியர்களினால் இந்த யாகம் சிறப்பான முறையில் நடாத்தப்பட்டது.
96மூலிகைகள் கொண்டு நடாத்தப்பட்ட இந்த யாகத்தின் மூலம் கொரனா அச்சுறுத்தல் நீங்கவும் பாதிக்கப்பட்டவர்கள் சுகம் பெறவும் நாடு செழிப்படைந்து சுபீட்சமான வாழ்வு கிட்டவும் பிரார்த்தனை செய்யப்பட்டது.