வாழைச்சேனை ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் முத்துமாரியம்மன் ஆலயத்தின் எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு


கிழக்கு மாகாணத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களுள் ஒன்றான மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பிரதேசத்தின் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த வாழைச்சேனை ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் முத்துமாரியம்மன் ஆலயத்தின் எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றது.

 வாழைச்சேனை ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு இன்று செவ்வாய்க்கிழமை எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகழ்வு மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்து ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது வேண்டுதலை வேண்டி ஆலய முலஸ்தான பிள்ளையார் உட்பட்ட அனைத்து விக்கிரகங்களுக்கும்,  முத்துமாரியம்மனுக்கும் எண்ணெய் காப்பு சாத்தப்பட்டது.

அத்தோடு எண்ணெய் காப்பு நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து பக்த அடியார்களுக்கும் சிவ சின்னமான உருத்திராட்ச மாலை ஆலய நிருவாகத்தினரால் வழங்கி வைக்கப்பட்டது.

கும்பாபிஷேக எண்ணைய்க்காப்பு சாத்தும் பூசைகள் யாவும் தெல்லிப்பளை துர்க்காபுரம் ஸ்ரீதுர்க்கா தேவி தேவஸ்தான முதன்மை சிவாச்சாரியார் பிரம்மஸ்ரீ. சுந்தர செந்தில்ராஜா சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்றது.

புதன்கிழமை மஹா கும்பாபிஷேகமும் இடம்பெறவுள்ளதுடன். அதனை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூசைகள் இடம்பெற்று எதிர்வரும் மே மாதம் 18ம் திகதி சங்காபிஷேகமும் பாற்குட பவணியும் இடம்பெறவுள்ளது.

வாழைச்சேனை ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் முத்துமாரியம்மன் ஆலயமானது வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் நூறாண்டுகள் பழைமை வாய்ந்த ஆலயமான திகழ்ந்து வருகின்றமையால் பக்தர்கள் அதிகம் வருகை தந்துள்ளமை குறிப்பிடப்பிடத்தக்கது.