இரண்டாவது நாளாகவும் ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் மந்திர ஹல்ப மகா யாகம்


கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் மந்திர ஹல்ப மகா யாகம் சிறப்பாக நடைபெற்றுவருகின்றது.

சித்தர்களுக்கு எல்லாம் சித்தராக கருதப்படும் அகத்தியமாமுனிவரினால் செய்யப்பட்ட மந்திர ஹல்ப மகா யாகம் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரனா அச்சுறுத்தல் நீங்கவும்,நாட்டில் சாந்தியும் சமாதானம் ஏற்பட்டு மக்கள் சிறப்புடன் வாழவும் இந்த யாகம் நடாத்தப்படுகின்றது.

நேற்று அதிகாலை ஆரம்பமான இந்த யாகத்தின் இரண்டாவது கட்டம் நேற்று மாலை நடைபெற்றது.

ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்களின் தலைமையில் இந்த யாகம் சிறப்பாக நடைபெற்றுவருகின்றது.

ஆலயத்திற்கு முன்பாக அமைக்கப்பட்ட பெரும் யாக குண்டத்தில் நடாத்தப்படும் இந்த யாகமானது எதிர்வரும் சிவராத்திரி தினம் வரைக்கும் நடைபெறவுள்ளதுடன் தினமும் அதிகாலை 04மணிக்கும் மாலை 04மணிக்கும் மகா யாகம் நடைபெறவுள்ளது.

நேற்று மாலை மாமாங்கேஸ்வரருக்கு அபிசேக ஆராதனைகள் நடைபெற்று மந்திர ஹல்ப மகா யாகம் சிறப்பாக நடைபெற்றது.யாகத்தில் சிவபுராணம் பாடப்பட்டு பிரதான கும்பத்திற்கு மலர் இட்டு வணக்கம் செலுத்தும் நிகழ்வும் நடைபெற்றது.