விளையாட்டு வீரர்களின நன்மை கருதி சிவானந்தா விளையாட்டு மைதானமானது மட்டக்களப்பு மாநகர சபையினால் சிரமதானம் செய்யப்பட்டது.



 விளையாட்டு வீரர்களினதும், நடை பயிற்சிகளில் ஈடுபடும் பொதுமக்களினதும் நன்மை கருதி சிவானந்தா விளையாட்டு மைதானமானது மட்டக்களப்பு மாநகர சபையினால் இன்று (06) சிரமாதான அடிப்படையில் சுத்தம் செய்யப்பட்டது.

மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் மா. தயாபரன் அவர்களிடம் சிவானந்தா விளையாட்டுக் கழகத்தினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய மட்டக்களப்பு மாநகர சபையும், சிவானந்தா விளையாட்டுக் கழகத்தினரும் இணைந்து இச் சிரமதானப் பணிகளை முன்னெடுத்தனர்.










மிகக் பழமையானதும், தொன்மை வாய்ந்ததுமான சிவானந்தா வித்தியாலய மைதானத்தினை பல்வேறு பகுதிகளை சேர்ந்த விளையாட்டு வீரர்களும், நடை பயிற்சிகளை மேற்கொள்ளும் பொதுமக்களும் பயன்படுத்தி வருவதாகவும். இருந்தும் அண்மைக் காலமாக இம்மைதானமானது பயன்படுத்த முடியாதவாறு காடுமண்டி காணப்படுவது தொடர்பில் மாநகர ஆணையாளரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக உடனடியாக இம் மைதானமானது புனரமைக்கப்படுவதாகவும் இதற்காக மாநகர ஆணையாளருக்கு சிவானந்தா விளையாட்டுக் கழகத்தின் தலைவர் தமது நன்றிகளையும் தெரிவித்தார்.

அத்துடன் இரவு வேளையில் நடை பயிற்சிகளை மேற்கொள்ளும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மின் விளக்குகளும் மாநகர சபையினால் பொருத்திக் கொடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.