(புருசோத்)
ஆட்பதிவு தினைக்களம் விடுத்துள்ள விசேட அறிவித்தல் ஆனது. கொழும்பு வத்தறமுல்லையில் அமைந்துள்ள தலைமையகத்துக்கு தங்களுடய அடையாள அட்டையை ஒரு நாள் சேவை மூலம் பெற்று கொள்ள வருகின்ற மக்களின் நலன் கருதியும் மக்களிளுடய சேவையை விரைவாக செயற்படுத்துவதற்காகவும் புதிதாக ஒரு நடைமுறையினை செயல்படுத்தி உள்ளனர்.
வெளி மாவட்டங்களில் இருந்து வருகின்ற மகக்கள் மற்றும் கொழும்பில் இருந்து ஒரு நாள் சேவையை பெற்று கொள்ள வருகின்ற மக்கள் தங்களுடைய பிரதேச செயலகத்திற்கு சென்று பிரதேச செயலகத்தின் ஊடாக முன் கூட்டியே பதிவினை மேற்கொண்டு தங்களுக்காக வழங்கபடும் திகதி மற்றும் பதிவு இலக்கம் மற்றும் நேரத்தினை பெற்ற பிற்பாடு கொழும்பு வத்தரமுல்லையில் அமைந்துள்ள ஆட்பதிவு தினைக்காத்திற்கு வருமாறு தினைகள ஆனையாளர் அறிவுறித்தி உள்ளார்.
மற்றும் முன்கூட்டிய பதிவிற்காக தொலைபேசி இலக்கங்கள் தினைகளத்தால் அறிமுகபடுத்தபட்டுள்ளது (011) 522 6100, (011) 522 6126 இந்த இலக்கத்தின் ஊடாக அழைப்பினை மேற்கொண்டு பதிவினை மேற்கொள்ளுமாறும் பதிவினை மேற்கொள்ளாத எவரும் இன்றில் இருந்து ஆட்பதிவு தினை களத்தில் உள்வாங்க படமாட்டார்கள் என்றும் தினைகள ஆணையாளர் தனது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்
