ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஏற்பாட்டில் தியானம் மற்றும் யோகாசன பயிற்சிகள்


மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஏற்பாட்டில் தியானம் மற்றும் யோகாசன பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இன்று காலை இது தொடர்பான ஆரம்ப நிகழ்வு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் அன்னதான மண்டபத்தில் நடைபெற்றது.

ஆரம்ப நிகழ்வில் ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வண்ணக்குமார்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள்,பயிற்சியாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

மனிதர்களுக்கு மிகவும் அவசியமான அமைதி மற்றும் ஆனந்தத்தை அனுபவிக்க ஜெபமும் தியானமும் இன்றிமையாதது அவற்றினை யோக கலை மூலம் ஒருங்கிணைத்து செயற்படுவதன் மூலம் சிறந்த சமூக கட்டமைப்பினை உருவாக்கமுடியும் என்ற நோக்குடன் ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தினால் இந்த வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் பயணடையும் வகையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 8.00மணி தொடக்கம் காலை 9.30மணி வரையில் இந்த பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தினால் கல்விப்பணி, ஆன்மிகப்பணியென பல்வேறு சமூக பணிகளும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.