உதயகுமார் கல்வி நிலையத்தினால் "வளர்ச்சியின் உச்சநிலை கல்வி" எனும் தொனிப்பொருளில் மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள்,பாடசாலை மாணவர் தலைவர்களுக்கான சீருடை,மற்றும் ம/மமே/வலய க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்குரிய ஆங்கில பாடசாலை மேம்பாட்டுக்கு உரிய கையேடுகள் தயாரித்து வழங்குவதற்கு நிதியுதவி வழங்கி வைப்பு .
19/03/2021 இன்றைய தினம் "வளர்ச்சி யின் உச்சநிலை கல்வி " எனும் தொனிப்பொருளில் உதயகுமார் கல்வி நிலையத்தினால் ம/ம மே/கற்சேனை அ.த.க பாடசாலையில் மிகவும் வறுமை நிலையில் கல்வி கற்கும் இரு மாணவர்களுக்கு இரண்டு துவிச்சக்கர வண்டிகள்,பாடசாலை மாணவர் தலைவர்களுக்கான சீருடை வழங்குதல்,ம/மமே வலய க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்குரிய ஆங்கிலப்பாட மேம்பாட்டு கையேடுகள் தயாரித்து வழங்குவதற்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் திரு.க.சிறிதரன்,ம/மமே/ வலய ஆங்கில பாட சேவைக்கால ஆலோசகர் திரு.வே.திவாகரன்(IAS) முன்னிலையில் அக்னிச் சிறகுகள் தலைமை ஒருங்கிணைப்பாளரும்,உதயகுமார் கல்வி நிலையத்தின் செயலாளருமான திரு.ம.ஜெயக்கொடி,பொருளாளர் திருமதி அனோஜன் விதுசா,இணைப்பாளர் திரு.சோ.சிவாகரன்,இணைப்பாளர் செல்வி வெ. லக்சனா ஆகியோரால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள்,மாணவர்கள் கலந்துகொண்டனர், அத்தோடு உதயகுமார் கல்வி நிலையத்தின் அயராத உழைப்பு மாணவச் செல்வங்களை மேன்மேலும் கல்வியின் வளர்ச்சியில் முன்னேற்றத்தின் பாதையை உருவாக்கிச் செல்லும் என்றும் கூறப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.








