செங்கலடி பிரதேசசபை உறுப்பினர்கள் சபை முன் எதிர்ப்பு நடவடிக்கையில்!


(செங்கலடி சுபா)

மட்டக்களப்பு – ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபை அமர்வை புறக்கணித்து உறுப்பினர்கள் சபைநடவடிக்கையில் கலந்துகொள்ளாது எதிர்;ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

31 சபை உறுப்பினர்களைக்கொண்ட் செங்கலடி பிரதேச சபையின் தவிசாளர் நாகமணி கதிரவேல தலைமையில் இன்றைய பிரதேச சபையின் 36வது மாதாந்த அமர்வானது கூடவிருந்த நிலையில் சபை நடவடிக்கைகளில் கலந்துகொள்ளாது சபை முன் பிரதித்தவிசாளர் உள்ளிட்ட 23 உறுப்பினர்கள் இன்று காலை எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இன்று வியாழக்கிழமை சபை அமர்விற்கான அழைப்பிதழ் நேற்று புதன்கிழமை காலைதான் சபையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டதாகவும், பிரதேசசபை சட்டத்தின் படி நான்கு நாட்களுக்கு முன் அறிவிக்கப்படவேண்டும் என்றும்இ இருப்பினும் பிரதேசசபையின் செயலாளர் எங்களை முட்டாள் என்கின்ற நிலைக்கு நடாத்திக்கொண்டிருக்கின்றார். தவிசாளர் மற்றும் செயலாளரை நீக்கவேண்டும் எனவும்

நான்கு நாட்களுக்கு முதல் அழைப்பிதழ் கிடைக்காததன் காரணமாக பிரதேச சபை சட்டத்தின் பிரகாரம் நாங்கள் இந்த கூட்டத்தை புறக்கணித்துள்ளோhம் எனவும் உள்ளுராட்சி ஆணையாளர்கள் இதற்குரிய சட்டநடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் குறித்த எதிர்;ப்பு நடவடிக்கை பிரதேசசபை முன் நடைபெற்றது.

 குறித்த எதிர்ப்பு நடைபெற்றிருக்கும் போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஜனநாஜக தேசிய கட்சியின் ஒரு உருப்பினர் கூட்டத்திற்கு சென்றிருந்ததனால் இன்றைய அமர்வில் கோரம் இன்மையால் ஒத்திவைக்கப்பட்டது.

இதே வேளை கூட்டத்தில் கலந்துகொண்ட ஜனநாஜக தேசிய இயக்க கட்சியின் உறுப்பினருக்கும்இ எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

இன்றைய அமர்வின் ஒத்திவைப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த தவிசாளர் நாகமணி கதிரவேல்.

இன்றைய கூட்டத்திற்கான கடிதம் நேரத்திற்கு கிடைக்காமையினால் குறித்த உறுப்பினர்கள் வரகைதந்திருந்தும் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

தபாலக செயற்பாடுகள் தாமதமடைந்திருப்பதால் கடிதங்களை எமது அலுவலக ஊழியர்கள் மூலம் வழங்கியிருந்தோம்.

 இவர்களுக்கு ஏதும் பிரச்சிணையிருந்திருந்தால் தவிசாளராகிய என்னிடம் பேசி இதைத் தீர்த்திருக்கலாம். அதைவிடுத்து பொதுமக்களுக்கு 24மணிநேரம் சேவை செய்ய வந்தவர்கள் இவ்வாறு கூச்சிலிட்டுச் செல்கிள்னறனர் எனவும் விரைவில் அடுத்த கூட்டத்தை கூட்டுவதற்கு தீர்மாணித்திருப்பதாகவும் தெரிவித்தார்.