மட்டக்களப்பு – ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் இரண்டாவது தடவையாகவும்; தோற்கடிக்கப்பட்டது.தவிசாளர் நாகமணி கதிரவேல் தலைமையில் கூடிய இன்ற சபை அமரில் வீதி, வடிகாண், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பிரச்சினைத்தீர்வு என பல விடயங்கள் தொடர்பாக பேசப்பட்டதுடன். குறிப்பாக இன்றைய அமர்வில் கொரோனாவினால் மரணமாகும் ஜனாசா எரிப்புக்கு எதிராகவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன குறித்த பிரேரனையை சபையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சின் உறுப்பினர் அப்துல் சாஜித் கருத்து தெரிவித்தார். அதன் பின் தமிழ் தேசிய கூட்டமைபின் உறுப்பினர் எம்.முரளிதரன் ஜனாசா எரிப்பிற்கு கருத்து தெரிவித்ததுடன் மடடக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட் அரசுக்கு வரவுசெலவுத்திட்டத்திற்கு ஆதரவளித்தது தொடர்பிலும் கருத்து தெரிவித்தார்.
இதன் பின் கடந்தமுறை தோல்வியுற்ற வரவு செலவுத்திட்டம் சபையில் சமர்ப்பிக்கபட்படது. இதற்கும் எதிர்ப்பு தெரிவிப்பதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் கட்சியின் உறுப்பினர் ந.திருணாவுக்கரசு தெரிவித்தார்.
இதன் பின் உரையாடிய ஜனநாயக தேசிய இயக்கத்தின் உறுப்பினர் சபையில் எதிர்ப்பு தெரிவித்து வரவுசெலவுத்திட்ட அறிக்கையை கிழித்தெறிந்தார்.
உறுப்பினர்களின் எதிர்பினால்; வரவு செலவுத்திட்டம் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது.
31 உறுப்பினர்களைக் கொண்ட செங்கலடி பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக 07வாக்குகளும், எதிராக 22வாக்குகளும் அழிக்கப்பட்டது இதில் ஒருவர் நடுநிலையாக வாக்களித்ததுடன் இன்றைய சபை அமர்வில் ஒருவர் கலந்துகொண்டிருக்கவில்லை.
இதன்போது வரவுசெலவுத்திட்டம் தோற்கடிக்கபட்டது.
இதேவேளை கடந்த நவம்பர் 30ம் திகதி சபையில் சமர்ப்பிக்கபட்ட வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டதைத்தொடர்ந்து மீண்டும் இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டது.
கடந்த வரவு செலவுத்திட்டத்தில் 08பேர் ஆதரவாகவும் , 22பேர் எதிர்ராகவும் வாக்களித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.