(ரஞ்சன்)
கிழக்கிழங்கையின் வரலாற்றுசிறப்பும் மிகவும் பழமையான விஸ்ணு ஆலயமாகவும் உள்ள திருப்பழுகாமம் மகா விஷ்ணு ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று காலை தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெற்றது.
மிகவும் தொன்மைமிக்க இந்த ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த 31ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
ஆலயத்தில் தினமும் சுவாமி வெளி வீதீ உலா வருதல் நடைபெற்று வந்த நிலையில் நேற்று ஆலயத்தில் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விசேட பூசையானது கண்ணன் வரவேற்பு சிலை முன்றலில் நடைபெற்று நேற்று இரவு திருவேட்டை திருவிழாவும் பண்டைய கால சிறப்புகளுடன் கோலகலமாக நடைபெற்றது.
இன்று காலை ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்ற பக்தர்கள் புடைசூழ விஸ்ணு பகவான் மட்டக்களப்பு வாவியில் எழுந்தருளி ஹரே கிருஸ்ணா கோசத்துடன் தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
இலங்கையின் மிகவும் பழமையானதும் தொன்மைமிக்கதுமான இந்த விஸ்ணு ஆலயத்தின் உற்சவங்கள் தமிழர்களின் பாரம்பரிய பண்பாடுகளை தாங்கியவாறு தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.