சுவிஸ் உதயம் அமைப்பினால் அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு இடமங்களில் நிவாரண நடவடிக்கைகள்


கொரோனா நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசாங்கத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குச்சட்டத்தால் சட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் பல்வேறு பொது அமைப்புகளும் செல்வந்தர்களும் புலம்பெயர் அமைப்புகளும் வறிய மக்களுக்கு உதவ நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது
அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்தில் காயத்திரிபுரம்  விநாயகபுரம் தங்கவேலாயுதபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள மிகவும் வறிய நிலையில் காணப்படும் மக்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு நேற்று மாலை திருக்கோவில் பிரதேச செயலாளர் கஜேந்திரன் தலைமையில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம்,காரைநகரை சேர்ந்த சுவிஸ் நாட்டில் வதியும் நவரெத்தினம் செல்வரெத்தினம் அவர்களின் உதவியுடன் உள்ள 1500 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் 100 குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன
சுவிஸ் உதயம் அமைப்பின் தாய் சங்க பொருளாளர் க.துரைநாயகம் மற்றும்  சுவிஸ் உதயம் அமைப்பின் இலங்கைக்கிளை இலங்கைகிளை தலைவர் எம்.விமலநாதன்,சுவிஸ் உதயம் அமைப்பின் இலங்கைகிளை பொருளாளர் அக்கரைபாக்கியன் ஆகியோர்  இதன்போது கலந்து கொண்டனர்.