(எஸ்.நவா)
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக தமது வருமானங்களை இழந்தள்ள அன்றாடம் தொழிலில் ஈடுபடுகின்ற மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரிவின் வெல்லாவெளி கிராம சேவக பிரிவில் உள்ள வெள்ள அனர்த்தத்தின் போது தொடர்ச்சியாக பாதிக்;கப்படுகின்ற வேத்திச்சேனை சிறிய கிராமத்தில் வெல்லாவெளியைச் சேர்ந்த சுவிஸ் நாட்டில் தற்போது தொழில் புரிந்து கொண்டிருக்கின்ற சுதாகரன் குடும்பம் நிதியுதவியுடன் வேத்திச்சேனை முழு மக்களுக்குமான உலருணவுப் பொதிகள் வெல்லாவெளி சக்தி கலாமன்றத்தின் அணுசரணையுடன் போரதீவுப்பற்று பிரதேச செயலாளரின் ஆலோசனைக்கு அமைவாக வழங்கி வைக்கப்பட்டது.
இதன் போது அரசினால் வழங்கப்படுகின்ற மாதாந்த பொதுசன கொடுப்பனவு மற்றும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான இரண்டாம் கட்ட 5000ருபா கொடுப்பனவு இதன் போது வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.