வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் விடுத்துள்ள உருக்கமான வேண்டுகோள்

கொரனா அச்சுறுத்தலினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஊரடங்கு சட்டம் காரணமாக வேலையற்ற பட்டதாரிகள் பெரும் கஸ்டங்களை எதிர்கொண்டுவருவதாகவும் அவர்கள் தொடர்பில் அரசாங்கம் கவனமெடுக்கவேண்டும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் வேண்டுகோள்விடுத்துள்ளது.

இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தலைவர் க.அனிரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தற்பொழுது உலகளாவியரீதியில்  பேசுபொருளாக கொரணா வைரஸ் மாறியுள்ள அதேவேளை எமது நாட்டைப்பொறுத்தமட்டில் எமது அரசு அதற்க்கான தடுப்பு முறைகளை மேற்க்கொண்டுள்ளது. அதில் ஒரு விடயம்தான் ஊரடங்கு சட்டம். 

இவ் ஊரடங்கு சட்டத்தினால் எமது நாடு கொரணா தொற்றினால் பாதுகாக்கப்பட்டுக்கொன்றிருக்கின்றது.  அது அனைவரும் அறிந்த விடயமே, இவ்வாறான விடயங்கள் நாட்டிற்கு நன்மை பயற்கும் அதே வேளை இதனால் ஒரு சிலர் அன்றாட வாழ்க்கையில் பாதிப்படைந்திருக்கின்றனர். 

எடுத்துக்காட்டாக பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்ட வழங்கப்படாமல் இருக்கின்ற நியமனங்களும் அதன் செயற்பாடுகளும். தற்போதைய நிலையில்  பட்டதாரிகள் பெரும் கஷ்ட்டத்துக்கு உள்ளாகி இருக்கின்றனர். அதன்படி தற்பொழுது அரசினால் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிவாரணப் பணிகளில் கூட பங்கற்றவர்களாக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை அரசினால் தற்போதைய நிலை குறித்து பட்டதாரிகளுக்கு வழங்கப்படவிருந்த. மாதாந்தம் 20000ரூபாவும் வேதனமும் இல்லாமல் போயிருக்கின்ற நிலையில் தள்ளப்பட்டிருக்கின்றோம்.

இன் நிலையில் பட்டதாரிகளாகிய நாங்கள் அன்றாட தொழிலிலை இழந்து வீட்டில் முடங்கி இருந்து வருமானம் இன்றி குடும்பத்தினை நகர்த்த மிக சிரமப்பட்டுக்கொண்டிருக்கின்றோம்.  அதே  வேளை நியமனத்திற்கென்று தெரிவாகிய 45845 பட்டதாரிகளிள் இருக்கின்றனர்.

இவற்றுள் இது வரைக்கும் 23000 பட்டதாரிகளுக்கு மாத்திதரமே நியமனக்கடிதங்களும் அனுப்பப்பட்டிருக்கின்றன. என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. எனவே எங்களது நிலை குறித்து இவ் அரசாங்கம் முக்கிய கவனம் எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றோம்.