மட்டக்களப்பு நகரில் தொற்று நீக்கும் நடவடிக்கை –பொலிஸாரும் இளைஞர்களும் ஒத்துழைப்பு

மட்டக்களப்பு மாநகரம் உட்பட பல பகுதிகளில் இன்று காலை முதல் தொற்று நீக்கும் பணிகள் மட்டக்களப்பு மாநகரசபையினால் முன்னெடுக்கப்பட்டது.

நாளை மறுதினம் காலை முதல் மட்டக்களப்பு மாவட்டம் உட்பட 19 மாவட்டங்களின் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ள நிலையில் மக்கள் அதிகமாக வந்துசெல்லும் பகுதிகளில் இந்த தொற்று நீக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரின் கலக தடுப்பு தண்ணீர் அடிக்கும் வாகனத்தின் உதவியுடன் இந்த தொற்று நீக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவனின் நேரடி வழிநடத்தலின் கீழ் இந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் வீதிகளும் மட்டக்களப்பு பிரதான பஸ் நிலையம்,பிரதான தனியார் பஸ் நிலையம்,பொதுச்சந்தை மற்றும் பொதுமக்கள் செறிவாக வாழும் பகுதிகளில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த நடவடிக்கைகளின் மாநகரசபை ஊழியர்கள், பொலிஸார், இளைஞர்கள்,மாநகரசபை உறுப்பினர்கள் என பலர் ஈடுபட்டனர்.