யாழ்ப்பாணத்தில் சிக்கியவர்களின் குடும்பங்களுக்கு வாகரையில் உதவி.



ஊரடங்கு சட்டம் காரணமாக வெளி மாவட்டங்களுக்கு சென்று வீடு திரும்பாதவர்களின் குடும்பங்களுக்கு முனைப்பினால் உலர் உணவு பொதிகள் வழங்கிவைப்பு.   

  நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலமை காரணமாக  வாகரையில் இருந்து கூலித் தொழிலுக்கு  சென்று வீடு திரும்ப முடியாமல் யாழ்ப்பாணத்தில் சிக்கிய 35 நபர்களின்  குடும்பங்கள் மற்றும் மேலும் தேவைப்பாடுடைய  ஒரு தொகுதியினருக்கு நேற்று முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தினால் உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. 

      யாழ்பாணம் சென்று திரும்ப முடியாமல் உள்ள 35 பேரும் முனைப்பு நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு தாங்கள் உணவின்றி யாழ்ப்பாணத்தில் கஷ்ரப்படுவதாகவும் தங்களுக்கு உணவு ஏற்பாடு செய்து தருமாறும் தாங்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து வரமுடியாமல் இருப்பதனால் வீடுகளில் கஷ்ரப்படும் தமது குடும்பங்களுக்கு உதவுமாறும் கோரிக்கை விடுத்த நிலையிலேயே முனைப்பு நிறுவனம் மனித நேயக்கரம் நீட்டியது.


 வாகரை, புளியங்கண்டலடி, பால்சேனை, வாம்மிவட்டவான்,கதிரவெளியில் உள்ள இவர்களது 35 குடும்பங்களுக்கும் உலர் உணவு வழங்கி வைக்கப்பட்டதுடன்      மேலும் வாகரை கண்டலடி, புளியங்கண்டலடி, 5ஆம் வட்டாரம் போன்ற பகுதியில் உள்ள மேலும் ஒரு தொகுதியினருக்கும் உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. 

      முனைப்பு சுவிஸ் நிறுவனத்தின் அனுசரணையில் முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட இவ் உலர் உணவுப் பொதிகளை முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத் தலைவார் மாணிக்கப்போடி சசிகுமார்,செயலாளர் இ.குகநாதன்,பொருளாளர் அ.தயானந்தரவி ,ஆலோசகர் க.புஸ்பராசா ஆகியோர் நேரடியாக சென்று  வழங்கிவைத்தனர்

       இதேவேளை யாழ்பாணத்தில்  சிக்கியவர்களுக்கு  அங்கு உள்ள சமூக ஆர்வலர்களுடன் தொடர்பு கொண்டு , (இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் கோப்பாய் பிரதேச சபை தவிசாளர்) அவர்கள்  ஊடாக வீடு திரும்பும் வரை உணவு ஏற்பாடும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் தலைவர் மாணிக்கப்போடி சசிகுமார் அவர்களினால்..