சமூக இடைவெளியை பேணுவதன் ஊடாகவும் கோரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம் என்பதற்கமைவாக மருத்துநீர் வீடுவீடாக சென்று மக்களுக்கு ஆலய அறங்காவலர்சபையினர் வழங்கி வைத்துள்ளனர்.
போரதீவுப்பற்று பிரதேச செயலாளரினால் கடந்த வாரம் ஆலய அறங்காவலர்களுக்கு விடுக்கப்பட்ட பணிப்புரைக்கு அமைவாக வீடுவீடாக சென்று மருத்துநீர் ஆலய தொண்டர்களால் வழங்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காரணத்தினாலும், மக்கள் கூடுவதை தவிர்க்கும் முகமாகவும் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி இத் தீர்மானத்தை எடுத்து கிராம சேவகர்களினூடாக நடைமுறைப்படுத்தியுள்ளார்.
மக்கள் நலன்கருதி இந்த செயற்பாட்டை நடைமுறைப்படுத்திய ஆலய அறங்காவலர் சபைகளுக்கு பிரதேச செயலாளர் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
இந்த செயற்பாட்டுக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.









