நாளந்தம் வருமானம் பெற்று தமது சீவனோபாயத்தை நடாத்திவந்த பலகுடும்பங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது கொரோனா நோய்த்தாக்கத்தினால்.
இக்கால சூழ்நிலையில் மக்களின் பசிபோக்க சீ.மூ.இராசமாணிக்கம் மக்கள் அமைப்பிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக அதன் தவிசாளர் இரா.சாணக்கியன் அவர்களினால் 150 குடும்பங்களுக்கான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.
நேற்று சனிக்கிழமை ( 04.04) துறைநீலாவணை 7 மற்றும் 8ம் வட்டார கிராமசேவகர் பிரிவுகளில் உள்ள தேவைப்பாடுடைய குடும்பங்களுக்கு இவ் உதவிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
இவ் உதவிகளை துறைநீலாவணை சிவசக்தி விளையாட்டுக்கழகம், துறைநீலாவணை ஜொலிபோய்ஸ் விளையாட்டுக்கழகம், நவசக்தி இளைஞர் கழகம் என்பன இணைந்து பகிர்ந்தளித்தமை குறிப்பிடத்தக்கது.

















