இது தொடர்பில் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
2019 ஏப்ரல் 21உயித்த ஞாயிறு அன்று இலங்கையின் தலைநகர் கொழும்பு உட்பட மூன்று நகரங்களில் நடாத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலினால் அப்பாவி பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர்.
மூன்று கிறித்தவக் கோவில்களிலும், மூன்று ஐந்து நட்சத்திர உணவு விடுதிகளிலும் இத்தொடர் குண்டுவெடிப்புகள் காலை 08:30 இற்கும் 09:15 மணிக்குமிடையில் நிகழ்த்தப்பட்டது.
இதில்வெளிநாட்டவர்கள், காவல்துறையினர் உட்பட குறைந்தது 253 பேர்வரை கொல்லப்பட்டனர்,
500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் கொழும்பு கொச்சிக்கடை, மட்டக்களப்பு சியோன் தேவாலயம், நீர்கொழும்பு ஆகிய இடங்களில் உள்ள தேவாலயங்களில் உயிர்த்த ஞாயிறு திருப்பலி நிகழ்வுகளி பொதுமக்கள் கலந்து கொண்டிருந்த போது நடத்தப்பட்ட இந்த தற்கொலை குண்டு தாக்குதலானது. மிகவும் கோளைத்தனமானது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சியோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு திருப்பலி நிகழ்வுகளி கலந்து கொண்டிருந்த பச்சிளம் பாலகர்கள் சிறுவர்கள் உட்பட சுமார் 29 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
இவர்களின் நினைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மக்கள் அனைவரும் நாளை 21 திகதி குண்டு வெடிப்பு நடைபெற்ற நேரமான காலை 8.30 மணி முதல் 9.21 மணி வரை உள்ள நேரத்தில் வீடுகளில் இருந்து விளக்கேற்றி அஞ்சலி செலுத்துமாறு மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியம் வேண்டுகோள் விடுக்கின்றது.