மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியில் 20மாணவர்கள் சாதனை

மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியில் வெளியாகியுள்ள கா.பொ.சாதாரண தர பரீட்சையில் 20 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் ஏ சித்திகளைப்பெற்று சாதனை படைத்துள்ளனர்.

நேற்று வெளியான கா.பொ.சாதாரண தர பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் 83வீதமான மாணவர்கள் உயர்தரத்திற்கு தகுதிபெற்றுள்ளதாக புனித மைக்கேல் கல்லூரியின் அதிபர் பயஸ் ஆனந்தராஜா தெரிவித்தார்.

20 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் ஏ சித்திகளைப்பெற்றுள்ளதுடன் 16மாணவர்கள் எட்டுப்பாடங்களில் ஏ சித்திகளைப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.