துறைநீலாவணையில் புற்றுநோயால் இறந்த குடும்பத்திற்க்கு உதவி.



துறைநீலாவணை எட்டாம் வட்டாரம் தீர்த்தக்கேணி வீதியில் வசித்துவந்த மூன்றுபிள்ளைகளின் தாயான
புஸ்பலதா ஜெயராசா புற்று நோயினால் பாதிக்கப்பட்டு வைத்தியர்களினால் கைவிடப்பட்ட நிலையில் 05.04.2020ம் திகதி மரணமடைந்தார்.

மிகவும் வறுமைக்கோட்டிட்குட்பட்ட குடும்பம் என்ற அடிப்படையில் மரணச்செலவிற்க்கு உதவுமாறு இலங்கைத் தமிழரசுக்கட்சியின் வாலிபர் முன்னணி செயலாளர் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன் ரூபா 10000.00 நிதியினை உதவுத்தொகையாக வழங்கிவைத்தார்.

குறித்த குடும்பத்திற்க்கான உதவி இறந்தவரின் கணவரிடம் நேற்று திங்கட்கிழமை 06.04 சிவசக்தி விளையாட்டுக்கழக உறுப்பினர்களால் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது .