கொரனா சந்தேகத்தில் மேலும் ஒருவர் மட்டு.போதனா வைத்தியசாலையில் அனுமதி -இலண்டனில் இருந்து வந்தவராம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மேலும் ஒரு கொரனா தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இலண்டனில் இருந்து மட்டக்களப்புக்கு வந்து தங்கியிருந்தவரே கொரனா சந்தேகத்தில் மட்டக்களப்ப போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் மட்டக்களப்பு நகரில் தங்கியிருந்த நிலையில் இன்று சுகவீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கொரணா சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதேநேரம் நேற்று முன்தினம் கொரனாவினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் திருகோணமலையில் இருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவருக்கு கொரனா தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

குறித்த நபர் இன்று சிகிச்சையின் பின்னர் வீடுசெல்ல அனுமதிக்கப்படுவார் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் இருந்து அனுமதிக்கப்பட்டிருந்தவர் கொரனா தொற்று இல்லையென்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் திருகோணமலையில் இருந்து கொண்டுவரப்பட்டவரும் கொரனா தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.