முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தினால் மட்/கன்னன்குடா ம.வி. மற்றும் கமு/ஹார்மேல் பற்ரிமா கல்லூரி மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கி வைக்கப்பட்டது.
கல்வி அபிவிருத்தித் வேலைத் திட்டத்தின் கீழ் வழங்கி வைக்கப்பட்ட இந் நிகழ்வில் முனைப்புஸ்ரீ லங்கா நிறுவனத்தின் தலைவர் மாணிக்கப்போடி சசிகுமார் செயலாளர் இ.குகநாதன் பொருளாளர் அ,தயானந்தரவி, கமு/ஹார்மேல் பற்ரிமா கல்லூரி அதிபர் அருட் சகோதரர் எஸ்.சன்தியாகு,பிரதி அதிபர் திருமதி எஸ்,ரவிந்திரகுமார் மற்றும் பழைய மாணவர் சங்க செயலாளர் B.கோகுலராஜன்,பொருளாளர் திருமதி T,K,பத்திரண ,நிருவாக சபை உறுப்பினர் k,கஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் வறுமை நிலையில் உள்ள மக்களின் வாழ்வாதாரம் மற்றும் கல்வி அபிவிருத்தியினை மேற்கொள்வதற்காக பல்வேறுபட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.