தமிழ்தேசிய கூட்டமைப்பு வேட்பு மனு கையளிப்பு இன்று.




தமிழ்தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்புமனு சற்றுமுன்னர் (இன்று புதன்கிழமை 18.02) மாவட்ட செயலகத்தில் கையளிப்பு.

இலங்கையில்  எதிர்வரும் ஏப்ரல் 25ல் நடைபெறவுள்ள 09வது நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ள தமிழ்தேசிய கூட்டமைப்பு அதன் வேட்பு மணுவை கட்சியின் பொதுச்செயலாளரும் முதன்மை வேட்பாளருமான கி.துரைராசசிங்கம் தலைமையில் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரிடம் இன்று கையளித்துள்ளது.

இந் நிகழ்வில் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன் மற்றும் ஞா.ஸ்ரீநேசன் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

நாளை 19.03.2020ம்திகதி வேட்புமணு தாக்கலுக்கான கால எல்லை நிறைவு பெறுவதும் குறிப்பிடத்தக்கது .