எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் பணிகள் பூர்த்தியடைந்தன.
முட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அமைமக்கப்பட்டுள்ள தேர்தல் திணைக்களத்தின் ஊடாக கடந்த 17ஆம் திகதி முதல் வேட்பு மனுத்தாக்கல் கையேற்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இன்று நண்பகல் 12.00மணி வரையில் நடைபெற்ற இந்த வேட்பு மனுத்தாக்கலில் 44 வேட்பு மனுக்கல் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக மாவட்ட தேர்தல் திணைக்களம் தெரிவத்துள்ளது.
இவற்றில் 19 அரசியல் கட்சிகளும் 25சுயேட்சைக்குழுக்களும் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளதாக மாவட்ட தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று காலை வட மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி,கருணா தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி,ஆனந்தசங்கரியின் தமிழர் விடுதலைக்கூட்டணி,பசீர் சேகுதாவூத் தலைமையிலான ஐக்கிய சமாதான கூட்டமைப்பு உட்பட பல கட்சிகள் இன்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன.
இதேபோன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,ஐக்கிய தேசிய கட்சி,தமிழ் தேசிய கூட்டமைப்பு,பொதுஜன பெரமுன,தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உட்பட 19 கட்சிகள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களைக்பெற்றுக்கொள்வதற்காக 352பேர் போட்டியிடுகின்றனர்.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக இரண்டு பிக்குகள் தலைமையிலும் சுயேட்சைக்குழுக்களுக்கான வேட்பு மனுத்தாக்கல்கள் செய்யப்பட்டுள்ளன.