ஆளுநரின் பங்களிப்புடன் இடம்பெற்ற பசுமையான கிழக்கு எனும் மரம் நடுதல் நிகழ்ச்சித்திட்டம்

கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற "பசுமையான கிழக்கு" என்ற தொனிப்பொருளிலான மாகாண மரம் நடுகை நிகழ்ச்சித்திட்டம் - 2020 கிழக்கு மாகாண ஆளுனர் கௌரவ அனுராதா ஜெகாம்பத் அவர்களினால் இன்று (28.01.2020) மட்டக்களப்பில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் U.L.A அசீஸ் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றதுடன். மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களும், வாழைச்சேனை, ஓட்டமாவடி, கிரான் ஆகிய பிரதேசங்களின் பிரதேச செயலார்களும், வாழைச்சேனை ஓட்டமாவடி ஆகிய பிரதேசங்களின் பிரதேச சபைகளின் தவிசாளர்களும், பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் S.பிரகாஸ் மற்றும் முதலமைச்சின் உதவிச் செயலாளர் ராகவன் அவர்களும், சுற்றுலா பணியகத்தின் தலைவர் மற்றும் ஆளுனரின் இணைப்புச் செயலாளர்கள், மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்திச் சங்கம், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் அரச சார்பற்ற நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இம் மரநடுகை நிகழ்ச்சித்திட்டம் கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் என்.தனஞ்ஜெயன் அவர்களால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. 

மேலும் ஆளுனர் அவர்கள் கிரான் பிரதேசத்தில் மரநடுகையை ஆரம்பித்துவைத்ததுடன் ஓட்டமாவடி, வாழைச்சேனை ஆகிய பிரதேசங்களிலும் மரநடுகை நிகழ்ச்சித்திட்டத்தினை ஆரம்பித்துவைத்தார். இந் நிகழ்வுக்குச் சமாந்தரமாக கிழக்கு மாகாணத்தின் அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளிலும் பிரதேச செயலாளர்கள் தலைமையில் மரம் நடுகை நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.