போரதீவுப்பற்று கலாச்சார மத்திய நிலையத்திற்கு சவுன்ட்சேவிஸ் உபகரணங்கள் வழங்கிவைத்தல்


போரதீவுப்பற்று பிரதேசத்தில் கலாச்சார மத்திய நிலையம் அமைத்து  பல ஆண்டுகள் நிறைவு பெற்றும் இவ் கலாச்சார மத்திய நிலையத்துக்கான பல தேவைகள் நிறைவேற்றப்பட்டடிருந்தும்  சவுன்ட் ஒலிபரப்பு உபகரணங்கள் பொருத்தப்படாததனால் இவ்மண்டபத்திற்கான பல நிகழ்வுகள் சிறப்பாக அமையவில்லை 
இதன் அடிப்படையில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் அவர்களின் வேண்டுதலுக்கமைவாக 2019 பல தடவைகள் முயற்சிகள் மேற்கொண்டிருந்த  போது முன்னாள் பிரதிஅமைச்சரும் அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான  சோ.கணேசமூர்த்தி அவர்களின் விசேட நிதி ஒதுக்கீட்டில் ஐந்து இலட்சம் பெறுமதியான சவன்ட ஒலிபரப்பு  உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு  அன்மையில் 2019 டிசம்பர்; 31ம் திகதி பிரதேச செயலாளர் அவர்களிடம் கையளிக்கப்பட்டு தொடர்ந்து கலாச்சார மத்திய நிலைய பொறுப்பதிகாரி ஏ.தேவருவன் அவர்களிடம் பிரதேச செயலாளர் அவர்களினால் நிரந்தரமாக பாரம் கொடுக்கப்பட்டது. 
இவ்மண்டபத்தில் எதிர்வருகின்ற காலங்களில்; சிறப்பான முறையில் நிகழ்வுகள் இடம்பெறுவதற்கு சகல வசதிகளும் நிறைவேற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்
இந்நிகழ்வின் போது முன்னாள் பிரதி அமைச்சர் சோ.கணேசமூர்த்தி பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி; உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சசிகுமார் நிலைய பொறுப்பதிகாரி ஏ.தேவருவன் பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தர்கள் பலர் இதன்போது கலந்து கொண்டனர்.