(சசி துறையூர் )
மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தினால் இன்று 01.01.2020 ஆரையம்பதி புகலிட சிறுவர் பராமரிப்பு நிலையத்திலுள்ள விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான கற்றல் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு.
மாவட்ட இளைஞர் கழக சம்மேளன தலைவர் மதிசுதன் பிரியங்கன் தலைமையில் நடைபெற்ற இவ் நிகழ்வில் இலங்கை இளைஞர் கழக தேசிய சம்மேளன பிரதிநிதியும் ஊடகத்துறை தலைவருமான ரி.விமலராஷ், முன்னால் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்கழக சம்மேளன தலைவர் எஸ். பயஸ்ராஷ், மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளன தலைவர் சஜீத் மண்முனைப்பற்று பிரதேச இளைஞர் கழக சம்மேளன தலைவர் டினேந்திரா ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.