போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் சத்தியபிரமாண கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு

 (எஸ்.நவா)

அரச அலுவலகங்களில் 2020ம் ஆண்டு கடமைகள் ஆரம்பிக்கும் நிகழ்வுகள் இன்று காலை 9.30மணியளவில் நடைபெற்றன.
மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி அவர்களினால் தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதமும் பாடப்பட்டது.
தொடர்ந்து நாட்டுக்காக உயிர்நித்தஅனைவர்pன் நினைவாக இரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் உத்தியோகத்தர்கள் சத்தியபிரமாணம் செய்யும் நிகழ்வும் நடைபெற்றதன் பின்னர் பிரதேச செயலாளரினால் விசேட உரையும் வழங்கப்பட்டது.
ஊத்தியோகத்தர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். தொடர்ந்து ஒன்று கூடல் மண்டபத்தில் பலர் புதுவருட வாழ்த்துக்களையும்  உரையாடி  பல்வேறு பட்ட சிற்றூண்டி வகைகளும் பகுந்தளிக்கப்பட்டு  மகிழ்ச்சிகரமாக நடைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.