தனக்கு அரசியல் அதிகாரம் கிடைத்தால் கலாச்சார மண்டபம் அமைக்கப்படும். - தேற்றாத்தீவில் சாணக்கியன்.



பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட தரிசனம் முன்பள்ளியின் கலை நிகழ்வும் விளையாட்டு விழாவும் தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் தரிசனம் முன்பள்ளியின் தலைவர் வி சதீஷ்காந் தலைமையில் இடம்பெற்றது.


இவ் விழாவிற்கு பிரதம அதிதியாக
  மட்டகளப்பு மாவட்ட முன்பள்ளி கல்வி பணியகம் செயலாற்று பணிப்பாளர் சசிதரன் அவர்களும்
விஷேட அதிதிகளாக  மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர்
தட்சிணாமூர்த்தி தவராணி, இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா சாணக்கியன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


நிகழ்வில் உரையாற்றிய  சாணக்கியன் தேற்றாத்தீவு கிராமத்தில் பலதரப்பட்ட அபிவிருத்தியில்   கடந்த காலங்களில் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு ஈடுபட்டது,  


 தேற்றாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலய தீர்த்த கங்கை அமைப்பதற்கான பணியை துவக்கி வைத்ததுடன் தேற்றாத்தீவு உதயம் விளையாட்டுக் கழகத்துக்கு கடின பந்து உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டது அத்தோடு  பாடசாலைகளுக்கு கற்றல் உபகரணங்களும்  வழங்கி வைக்கப்பட்டிருக்கிறது என்பதை நினைவுகூர்ந்தார்.


தேற்றாத்தீவு கிராமத்திற்கு கலை நிகழ்வுகள் பொது நிகழ்வுகள் மேலும் பல நிகழ்விற்கு பொதுவான ஓர் கட்டடம் தேவை என்பது கட்டாயமாக உள்ளது.  

இதை வருங்காலத்தில் தமக்கு ஓர் அரசியல் அதிகாரம் கிடைக்கும் பட்சத்தில் தாம் நிறைவேற்றுவதாகவும்  குறிப்பிட்டார்.


நிகழ்வில் மாணவர்களின் அழகிய  சிரட்டையில் நடத்தல் பாடலுக்கான அபிநயம் , குதிரை ஓட்டம் உடற்பயிற்சி கண்காட்சி போன்ற பல நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது .