மட்டக்களப்பில் தொடரும் மழை - 6696 குடும்பங்கள் பாதிப்பு –பல பகுதிகளுக்கான போக்குவரத்துகள் பாதிப்பு

மட்டக்களப்பில் ஏற்பட்டுள்ள தொடர்  அடை மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று விசேட அவசர கூட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

இதன்போது புனானை அணைக்கட்டில் நீர் அதிகரிக்குமானால் உடனடியாக 193 குடும்பங்கள் கிரான் பிரதேசத்தில் இருந்து  பாதுகாப்பான இடங்களை கொண்டு செல்லப்பட வேண்டும் வேண்டுமெனவும்  தெரிவிக்கப்படுள்ளது

மாவட்டத்தில் தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் அடை மழை காரணமாக அணைக்கட்டுகளில் நீர் அதிகரித்து வருவதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேநேரம் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முப்படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள அரசு அதிகாரிகளும் எந்தநேரத்திலும் களத்தில்   மக்களுக்கு சேவை செய்வதற்கு தயாராக இருக்கவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை  மட்டக்களப்பு மாவட்டத்தில் 8 இடைத்தங்கல் முகாம்கள்  அமைக்கப்பட்டு 301 குடும்பங்களைச் சேர்ந்த 799 நபர்கள் இதில் அடங்குகின்றனர்.

மட்டக்களப்பு  மாவட்டத்தை பொருத்தவரையில் 6696 குடும்பங்களை சேர்ந்த22614பேர் இடம்பெயர்ந்து உறவினர்களின் வீடுகளிலும் தங்கியுள்ளார்.

இவர்களுக்கான நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்  பட்டு வருவதுடன் உலர் உணவுப் பொருட்களும் சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வடமுனை ஊத்துச்சேனை ஆகிய பகுதிகளுக்கான போக்குவரத்துகள் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதிக்கு செல்லும் பிரதான வீதியூடாக ஐந்து அடிக்கும் மேல் நீர் பாய்வதன் காரணமாக போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளன.