தேற்றாத்தீவு அறிவொளி முன்பள்ளியின் விளையாட்டு விழாவும்பரிசளிப்பும்


பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட தேற்றாத்தீவு அறிவொளி முன்பள்ளியின் விளையாட்டுவிழாவும் பரிசளிப்பும் நேற்று தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலய முன்றலில் (28.11.2019) பி. 02.00 மணியளவில்  அடைமழையின் மத்தியிலும் வெகு சிறப்பாகவும் நேர்த்தியாகவும் நடைபெற்று முடிந்தது முன்பள்ளியின் தலைவர் த.விமலானந்தராஜா  தலைமையில் இவ்  விளையாட்டு விழா ஆரம்பமானது.


இவ் நிகழ்விற்கு பிரதம அதிதியாக ச.சசிதரன் செயலாற்றுப்பணிப்பாளர் முன்பள்ளி கல்வி  பணியகம் மட்டக்களப்பு மாவட்டம் கலந்து கொண்டார். இவ்
 விளையாட்டு விழாவின் பொது முன்பள்ளியின்  மாணவ மாணவிகளின் அணிநடை , உடற்பயிற்சி கண்காட்சிசாக்கு ஒட்டம்பூக்கோர்தல் போன்ற பல விளையாட்டுகள் நடைபெற்றதுடன் கலந்து சிறப்பித்த அனைத்து மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டதுடன். முன்பள்ளியின் ஆசிரியர்களுக்கு பெற்றோரினால் கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடதக்கவிடயம்.