தமிழர் தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர் தந்து வித்தாகிப்போன வீரமறவர்களின் ஒப்பற்ற ஈகையை ஆண்டுதோறும் நெஞ்ருத்தி நினைவுகூறும் நன்நாள் கார்த்திகை இருபத்தியேழு.
உணர்வு பூர்வமாக வடகிழக்கு பகுதிகளில் மக்களின் பங்களிப்போடு இன்று பல இடங்களில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வுகளில் இலங்கைத் தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராசசிங்கம், பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், வடகிழக்கு வாலிபர் முன்னணி தலைவர் கி.சேயோன் உட்பட்ட பிரமுகர்கள் வாகரை கண்டலடி மாவீரர் துயிலுமில்லத்தில் நடைமெற்ற அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டு சுடர் ஏற்றி அஞ்சலித்ததுடன் அகவணக்கத்தினையும் செலுத்தியுள்ளனர்.