குறிப்பாக மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட நாவற்குடா கிழக்கு பகுதி நீரில் மூழ்கியுள்ளதன் காரணமாக அப்பகுதியில் பல குடும்பங்கள் இடம்பெயரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன் போக்குவரத்து செய்வதிலும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.
இதன் காரணமாக குறித்த பிரதேசத்தில் தேங்கியுள்ள வெள்ள நீரினை வெளியேற்றம் பணிகளை கடந்த இரண்டு நாட்களாக மட்டக்களப்பு மாநகர சபையின் அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.