மட்டக்களப்பு மாங்காடு கிராமம் திரு. மயில்வாகனம் இராசமோகன் அவர்கள் அகில இலங்கை சமாதான நீதவானாக கடந்த 26.11.2019ம் திகதி செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி திரு. ரி கருணாகரன் முன்னிலையில் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமானிப்பட்டத்தைப் பெற்ற இவர்
தேசிய பயிலுனர் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபையின் (NAITA) அம்பாரை மாவட்ட பயிற்சி உத்தியோகத்தரார் என்பதுடன் மேற்படி அதிகாரசபையில் கடந்த 2012 வருடம் முதல் 2018 வரை மட்டக்களப்பு மாவட்டக்காரியாலயத்தில் பயிலுனர் பரிசோதகராகவும் கடமையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மட்/பட் மாங்காடு சரஸ்வதி மகாவித்தியாலயத்தில் ஆரம்பக்கல்வியை கற்ற இராசமோகன் உயர் கல்வியை மட்/பட் செட்டிபாளையம் மகாவித்தியாலயத்தில் கற்றார்.
மேலும் மாங்காடு கிராம அபிவிருத்தி சங்கத்தின் செயலாளரான இவர் 2003ம் வருடம் முதல் 2012 வரை மட்டக்களப்பு சர்வோதய நிறுவனத்தில் திட்ட இணைப்பாளராக, சமூகநலத்திட்ட இணைப்பாளராக, கள இணைப்பாளராக பல்வேறு பதவிகளை வகித்து சமூக சேவைகளில் ஈடுபட்டவர் .
அத்தோடு பல இளைஞர் யுவதிகள் தொழில் வாய்ப்பைப் பெறும் வண்ணம் தொழிற் பயிற்சிகளையும் பெற்றுக்கொடுத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.