அதாவுல்லாவின் அருவருக்கத்தக்க எச்ச பேச்சு எச்சில் நீருற்றி கழுவிய அமைச்சர் மனோ.



மலையக தமிழர்களை அருவருக்கத்தக்க சொல்  ஒன்றினை பயன்படுத்தி பேசியமைக்காக கோபமுற்ற முன்னால் அமைச்சர் மனோகனேசன் முன்னால் அமைச்சர் அதாவுல்லா முகத்தில் எச்சில்  நீர் வீச்சு.

நேற்று ஞாயிற்றுக்கிழமை  மாலை (24.11 ) தனியார் தொலைக்காட்சி அரசியல் நேர்காணல் நிகழ்ச்சியில் காபந்து அமைச்சின் மீன்பிடி மற்றும் கடற்தொழில் நீரியல் வள அமைச்சர் டக்லஸ் தேவானந்தா, முன்னால் அமைச்சர் மனோகனேசன், முன்னால் அமைச்சர் அதாவுல்லா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர் .


ஆரம்ப முதலே சூடு பறந்த நேர்காணலில் இடைநடுவில் முன்னால் அமைச்சர் அதாவுல்லா இணைந்து கொண்டார் அந்த நிமிடம் முதல் நெறியாளரையும் மனோகனேசன் பாராளுமன்ற உறுப்பினரையும் சீண்டிக்கொண்டிருந்தார் அதாவுல்லா.


குறுக்காக பேசுதல் மற்றவரின் கருத்துக்களை  பேசவிடாமல் தடுத்தல் தேவையற்ற வார்த்தைப்பிரயோகங்கள் என முன்னால் அமைச்சர் அதாவுல்லாவின் நச்சரிப்புக்கள் தொடர்ந்தன.

ஒரு கட்டத்தில் அதாவுல்லா  மலையக தமிழர்கள் தொடர்பாக பேசும்போது மனோகனேசன் அவர்களது வேலைத்திட்டங்களைப்பற்றி குறிப்பிட குறுக்கிட்ட முன்னால் அமைச்சர் மனோ கணேசன்  தனது செயற்பாடுகளை இவர் அறியாது பேசுகிறார் என்றார்.


அந்த சந்தர்ப்பத்தில்  சம்மந்தமில்லாது மலையக மக்களை  நேரடியாக  தோட்டக்காட்டான் என்று பேசினார், கோபமுற்ற மனோகனேசன் இந்த கருத்தை வாபஸ் வாங்க வேண்டும் என பலதடவைகள் வலியுறுத்தினார், நெறியாளரிடமும் பல முறை கேட்டுக்கொண்டார்,  திடிரென மேசையிலிருந்த தான் அருந்திய  நீரின் மீதியை அதாவுல்லாவின் முகத்தில் வீசியுள்ளார்.
மலையகத் தமிழரை தோட்டக்காட்டான் என  இழிவாக குறிப்பிட்டது தவறாகும்.
தமிழ் மக்கள் மட்டுமல்ல முஸ்லிம் மக்களும் இதனை கண்டிக்க முன்வர வேண்டும்.


அதேவேளை மனோ கணேசன் அதாவுல்லா மீது மேசையில் இருந்த தண்ணீரை எடுத்து ஊற்றியது தவறு,

மாறாக காலில் இருந்த செருப்பைக் கழற்றி அடிக்காததே தவறு ஆகும்.

அதாவுல்லா இனவாதி.

தன் இனம் கேவலப்படுத்தும்போது அதனை கண்டிக்க ஒரு தலைவர் முன்வராவிட்டால் அவர் அந்த இனத்தின் தலைவராக இருக்க தகுதி அற்றவர் ஆகிறார்.

  இவ்வாறான பல கருத்துக்கள் சமூகவலைத்தளங்களில் பேசு பொருளாகியுள்ளது.


எது எவ்வாறு இருந்த போதும் அரசியல் வாதிகளின் இத்தகைய பக்குவமற்ற போக்குகள் நாட்டின் சிறந்த எதிர்காலத்திற்கு நல்ல சமிஞையாக தெரியவில்லை என சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


இதே வேளை கடந்தவாரம் இதே நிகழ்ச்சியில் மலையக அரசியல் வாதி ஒருவர் மலையகசமூகம் தொடர்பாகவும் அவர்களின் கல்வி வளர்ச்சி தொடர்பாகவும் இழிவாக பேசியதாக கடும் வாதப்பிரதி வாதங்கள் போய்க்கொண்டிருக்கும்  சூடு தனிய முன்னர் இன்னுமொரு  சம்பவம் மலையக மக்களுக்கு நிச்சயமாக மனவேதனையை ஏற்படுத்தும்.


சம்பவத்தின் பின்னரான முன்னால் அமைச்சர் மனோகனேசனின் முகப்புத்தக பதிவு இது.




'சற்று முன்; ......................"ஒரு சம்பவம்"..............
மின்னல் நிகழ்ச்சியின், 6 மணி முதல் 7 மணி வரையிலான "நேரடி" ஒளிபரப்புக்கு பின் 8 மணி வரையிலான "பதிவு செய்யப்பட்ட" நிழ்ச்சியின் போது  தோட்டத்தொழிலாளர் தொடர்பில் பொதுவெளியில் பயன்படுத்த கூடாத வார்த்தையை, முன்னாள் அமைச்சர் அதாவுல்லா பயன்படுத்தினார்.

அதை நான் கண்டித்த போது மீண்டும், மீண்டும் சத்தம் போட முனைந்த அதாவுல்லா மீது என் மேஜையில் இருந்த குவளை நீரை நான் வீசி எறிந்தேன்.


நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்துவிட்டு, வந்தது முதல் நிகழ்ச்சி நடத்துனரையும், கலந்துக் கொள்ள வந்த என்னையும், அமைச்சர் தேவானந்தாவையும் இடையூறு செய்து கொண்டே இருந்து, இந்நாட்டின் எல்லா பிரச்சினைக்கும் சிறுபான்மை அரசியல்வாதிகளே காரணம் என்று, முழுக்க முழுக்க பெரும்பான்மை நிலைப்பாடுகளை நியாயப்படுத்தி எரிச்சல் ஊட்டிக்கொண்டிருந்த, முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் "சூட்டை", நான் எறிந்த "நீர்" குளிர்மை படுத்தி இருக்கும் என எண்ணுகிறேன்.


என்னிடம் விளையாட வேண்டாம், எந்த காரணத்துக்காகவும் பொதுவெளியில் பயன்படுத்தக்கூடாத வார்த்தையை பயன்படுத்த  வேண்டாம் என சொல்லி விட்டு வந்தேன். நடந்தவைகளை "எடிட்" செய்யாமல் அப்படியே ஒளிபரப்பும்படி சக்தி மின்னல் நிகழ்ச்சி தயாரிப்பாளரிடமும் சொன்னேன்.