தமிழ்தேசிய கூட்டமைப்பு இளைஞரணி என்ற பெயரில் வெளியான துண்டுப்பிரசுரம் போலியானது.



தமிழ்தேசிய கூட்டமைப்பு இளைஞரணி என்ற பெயரில்  ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபாய ராஜபக்சவை ஆதரித்து அவருக்கு வாக்கு செலுத்த கோரும் துண்டுப்பிரசுரம் ஒன்று தமது வேட்பாளர்  தேல்வி உறுதியென தெரிந்ததும் அவரது ஆதரவாளர்களால்  மக்களை குழப்பும் நோக்கில்   வெளியிட்டப்பட்டுள்ளது.


தமிழ் மக்களோ இளைஞர்களோ யாரும் இதனை நம்பமாட்டார்கள் இருந்த போதும் இது தொடர்பாக பொறுப்பு வாய்ந்த கட்சியின் வாலிபர் முன்னணி என்ற வகையில் தெளிவு படுத்த வேண்டியுள்ளது.
தமிழ்தேசிய கூட்டமைப்புக்கென்று இளைஞரணி இதுவரை இல்லை, அதே போன்று இலங்கைத் தமிழரசு கட்சியின் இளைஞர் அமைப்பு வாலிபர் முன்னணி என்றே அழைக்கப்படுகிறது. 


எனவே தமிழ்தேசிய கூட்டமைப்பு இளைஞரணி என்ற பெயரில் வெளியான துண்டுப்பிரசுரத்தையும் அதில் வெளிவந்த கருத்துக்களையும் முற்றாக மறுப்பதோடு தேர்லுக்கான பிரச்சார நடவடிக்கைகள் கடந்த 13.11.2019 புதன்கிழமை நள்ளிரவுடன் நிறைவுபெற்றுள்ளது, நாளை வாக்களிப்பு நிறைவுபெறும் கடைசி நிமிடம்  வரையிலும் விசமிகளால் இன்னும் பல போலியான, விசமத்தனமான புழுகுகளை அவிழ்த்துவிடுவர் அவைகளை பகுத்தாராய்ந்து வாக்களிப்பில் ஈடுபடுமாறு இலங்கைத் தமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி கேட்டுக்கொள்கிறது.