சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் வங்கி குறுநிதி பிரிவினால் நடாத்தப்பட்ட கிழக்கு மாகாண சமுா்த்தி வங்கி உதவி முகாமையாளா்களுக்கான திறன் அபிவிருத்தி பயிற்சி கருத்தரங்கு திருகோணமலை நிலாவெளி பயிற்சி நிலையத்தில் மூன்று நாட்கள் நடைபெற்றது.சமுர்த்தி வங்கிகளை சிறந்த முறையில் கொண்டு செல்வதற்கும் அதனுடைய முகாமைத்துவம் வாடிக்கையாளர் சேவைகள் வங்கி உத்தியோகத்தர்களின் பணி போன்ற பல வங்கி தொடர்பான நடவடிக்கைகள் மூன்று நாள் பயிற்சியின் போது விளக்கமளிக்கப்பட்டது.
இதன் போது வங்கி குறுநிதி பிரிவின் உதவிப்பணிப்பாளர் ஐ.அலிஜார் அவர்கள் நெறிப்படுத்தியதோடு வளவாளர்களாக கிளிநொச்சி மாவட்ட பணிப்பாளர் திருமதி.தவபாலன் யாழ்மாவட்ட பணிப்பாளர் கே.மகேஸ்வரன் கண்காணிப்பு சிரேஸ்ர முகாமையாளர்; வாலகரன் கிளிநொச்சி மாவட்ட சிரேஸ்ர முகாமையாளர் ஆர்.ராகுலநாதன் ஆகியோர்கள் வளவாளர்களாக கடமையாற்றியிருந்தார்கள் பயிற்சி நிறைவின் போது உதவி முகாiமாளர் என குறிப்பிட்டு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.