கோறளைப்பற்று தெற்கு பிரதேச இளைஞர் யுவதிகளுக்கான "எதிர்பார்ப்பின் இளைஞர் முகாம்" இன்று (06.09) வெள்ளிக்கிழமை பி.ப 02.30 மணியளவில் கிரான் மத்திய கல்லூரியில் ஆரம்பமாகவுள்ளது.
கோறளைப்பற்று தெற்கு பிரதேச இளைஞர் சேவை அலுவலர் த . விந்தியன் அவர்களின் வழிகாட்டல் ஒருங்கிணைப்பில் கோறளைப்பற்று தெற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் குறித்த இளைஞர் முகாமில் இளைஞர்களுக்கான தலைமைத்துவ ஆளுமை விருத்தி தொழில்வழிகாட்டல் தொடர்பான விருத்திக்கு பல பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன, இந்த பயிற்சி முகாமில் அறுபதுக்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
மூன்று நாட்கள் வதிவிடமாக நடைபெறவுள்ள இவ் இளைஞர் முகாமின் ஆரம்ப நிகழ்வில் பிரதேச செயலாளர், மத்திய கல்லூயின் அதிபர், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர், மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகள் என பல பிரமுகர்கள் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.