தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டம்


மட்டக்களப்பு தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டம் இன்று காலை பிரதேசஅபிவிருத்தி குழுவின் இணைத்தலைவர்களான பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர்அலி மற்றும் சோ.கணேசமூர்த்தி(ஐ.தே.க அமைப்பாளர்) தலைமையில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன் ஞா.ஸ்ரீநேசன் மற்றும் பிரதேசசெயலாளர் திருமதி.தட்சணாகௌரி பிரதேசசபை தவிசாளர் பிரதேசசபை உறுப்பினர்கள் கலந்கொண்டிருந்தனர்.

இக் கூட்டத்தில் பிரதேசத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்திகள் குறித்து ஆராயப்பட்டதுடன் தற்போது முன்னெடுக்கப்படும் திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. அத்துடன் பிரதேசத்தில் காணப்படும் பொது மக்களின் பொதுவான பிரச்சினைகள் வாழ்வாதாரம் தொழ்லாவாய்ப்பு பற்றியும் ஆராயப்பட்டது அத்துடன் குடிநீர் சுகாதாரம் மீன்பிடி விசசாயம் ஏனைய கைத்தொழில் துறைகளில் திர்நோக்கப்படும்  பிரச்சிணைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன் அவற்றிற்கான தீர்வுகளை பெற்றுக்காடுப்படுதொடர்பிலும் ஆராயப்பட்டது.

மேலும் குறிப்பாக சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அம்பாறை மாவட்ட அனுமதிப்பத்திரத்துடன் பட்டிப்பளை பிரதேசசெயலாளர் பிரிவுகளில் சட்டவிரேத மணல் அகழ்வில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கபட்டது. சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவோருக்கு எதிராக பொலிசார் நடிவடிக்கை எடுக்கும் போது நேர்மையாக சேவையாற்றும் பொலிஸ் அதிகாரிக்கு இடமாற்றம்புரிய இம் மணல் அகழ்வில் ஈடுபடும் சிலர் இணைந்து முயற்சிப்பதாகவும்; குற்றம்சாட்டப்பட்டது.
சட்டவிரோதமாக காடுகள் அழிக்கப்ட்டு மரங்கள் கடத்தப்படுவதாகவும் இதனை வனபரிபாளனசபையினர் கண்டுகொள்ளாமலிருப்பதாகவும் பாமர ஏழை சிறு கத்தியுடன் சென்றால் அவகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை புரிவதாகவும் கலந்துரையாடப்பட்டது. 

மேலும் இதன்போது கருத்துதெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் வீடமைப்பு அதிகாரசபையின் பணிப்பாளருக்கு கூறுங்கள் வெளிமாவட்டத்தைச்சேர்ந்த மக்களுக்கு இங்கு வீடுகள் வழங்கமுடியாது வழங்கவும் காணிக்குரியஇடமில்லை என்பதை தெழிவாக கூறுங்கள்.  வீட்டுத்திட்டத்தினுள் அம்பாறை மாவட்டத்தினைச் சேர்தவர்கள் உள்வாங்ப்படுவது முற்றாக நிறுத்தவேண்டும் இதற்கு இந்த அபிவிருத்திக்குழுக்கூட்டம் அனுமதிவழங்காது. சில பௌத்த மதகுருமார்களின் சிபாரிசில் இப்படியான வேலைகள் நடைபெறுகின்றது இனியும் இவ்வாறு வெளிமாவட்டத்தைச்சேர்ந்தவர்களுக்கு வீடுகளோ காணிகளோ வழங்கமுடியாது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.