கல்லடி முகத்துவாரம் விபுலானந்த வித்தியாலயத்தில் தொழில்நுட்ப விஞ்ஞான ஆய்வுகூடம் திறந்துவைப்பு

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கல்லடி முகத்துவாரம் விபுலானந்த வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப விஞ்ஞான ஆய்வுகூடம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

சகல வசதிகளையும் கொண்டதாக பின்தங்கிய மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை நோக்காக கொண்டு இந்த தொழில்நுட்ப விஞ்ஞான ஆய்வுகூடம் அமைக்கப்பட்டுள்ளது.

பாடசாலையின் அதிபர் ரி.ராஜ்மோகன் தலைமையில் நடைபெற்ற இந்த திறப்பு விழாவில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன்,மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் வே.மயில்வாகனம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

சுமார் நான்கு கோடி ரூபா செலவில் அண்மையில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்தின் கீழ் இந்த பாடசாலை கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் மாகாண மட்ட போட்டியில் சாதனைபடைத்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.