சித்தாண்டி பேச்சியம்மன் கோவில் வீதி இன்று முதல் மக்களின் பாவனைக்கு.






கம்பரலிய திட்டத்தின் ஊடாக தமிழ்தேசியக் கூட்டமைப்பின்  பாராளுமன்ற உறுப்பினர் ஞா. சிறிநேசன் அவர்களின் 2மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் மூலம் புணரமைக்கப்பட்ட சித்தாண்டி பேச்சியம்மன் கோவில் வீதி இன்று காலை மக்கள் பாவனைக்கு  திறந்துவைக்கப்பட்டது.

பிரதேச சபை உறுப்பினர் முரளிதரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதேச முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டதுடன்,  பாராளுமன்ற உறுப்பினர் ஞா. சிறிநேசன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வீதியை திறந்து வைத்தார்.

குறித்த வீதி புனரமைப்பு கோரிக்கையானது ஏறாவூர் பற்று பிரதேச கிளையின் உபசெயலாளரும், மட்டு வாலிபர் முன்னணியின் மாற்றுத்திறனாளிகள் விடயதன பொறுப்பாளர்
கே. சோபனன் அவர்களால் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.